‘அனைத்தும் சாத்தியம்’ அருங்காட்சியகத்திற்கு விருது: முதல்வரிடம் வாழ்த்து

‘அனைத்தும் சாத்தியம்’ அருங்காட்சியகத்திற்கு விருது: முதல்வரிடம் வாழ்த்து
X
‘அனைத்தும் சாத்தியம்’ அருங்காட்சியகத்திற்கு கிடைத்த விருதை முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில், Mphasis மற்றும் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்கான தேசிய மையத்தால் (National Centre for Promotion of Employment for Disabled People) 28.09.2023 அன்று புதுதில்லியில் நடைபெற்ற “உலகளாவிய வடிவமைப்பு" விருதுகள் 2023 நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் "அனைத்தும் சாத்தியம்” அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்ட விருதினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலிடம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதன்மைச் செயலாளர் (மு.கூ.பொ) சுன்சோங்கம் ஜடக் சிரு காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள “அனைத்தும் சாத்தியம்” என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை முதல்வர் 6.6.2022 அன்று திறந்து வைத்தார்.

“அனைத்தும் சாத்தியம்" என்ற அருங்காட்சியகமானது மாற்றுத்திறனாளிகள் உபயோகப்படுத்தும் 200-க்கும் மேற்பட்ட உதவி உபகரணங்கள் மற்றும் அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பொருட்கள் அங்கு வருகை புரிபவர்களுக்கு அவர்கள் தனிச்சையாக வாழ்வதற்கு ஏதுவாக காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அருங்காட்சியகத்தில் மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய இல்லம், வேலை செய்யும் இடத்தில் தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் அவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு ஓய்வு நேரங்களில் பயன்படுத்தும் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்புமிக்க தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான “அனைத்தும் சாத்தியம்” அருங்காட்சியகத்திற்கு புதுதில்லியில் 28.09.2023 அன்று Mphasis மற்றும் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்கான தேசிய மையத்தால் "உலகளாவிய வடிவமைப்பு" விருதுகள் 2023 நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட விருதினை, மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் ஏ.கே.கமல் கிஷோர், மாற்றுத்திறனாளிகள் அருங்காட்சியகத்தின் ஒருங்கிணைப்பாளர்களுடன் பெற்றுக்கொண்டார்.

-இந்த நிகழ்வின்போது, சமூக நலன் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் ஏ.கே.கமல் கிஷோர், “அனைத்தும் சாத்தியம்” அருங்காட்சியகத் தலைவர் பூணம் நடராஜன், மேலாளர் ஏ. பிரபாகரன், கூடுதல் மேலாளர் ஷிவானி, பேச்சு பயிற்சியாளர் காபா நாசியா ஓமர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!