ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை நிராகரித்த ஆவடி போலீஸ்

ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை நிராகரித்த ஆவடி போலீஸ்
X

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம். (பைல் படம்)

பொது வெளியில் நடந்தால் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதியோ, மறுப்போ கூற முடியும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில் நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்றும் இதற்கு அனுமதி தரக்கூடாது என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆவடி போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இதற்கு ஆவடி போலீஸ் தரப்பில் இன்று கூறப்பட்டு இருப்பதாவது: கோர்ட்டு உத்தரவுபடி பொதுக்குழு கூட்டத்துக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். தனி நபர் அரங்கில் கூட்டம் நடைபெறுவதால் இதில் தலையிட முடியாது. பொது வெளியில் நடந்தால் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதியோ, மறுப்போ கூற முடியும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை ஆவடி போலீஸ் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai solutions for small business