சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு.. ஆன்லைன் புக்கிங் 40 ஆயிரமாக அதிகரிப்பு
மண்டலம் சீசனை முன்னிட்டு சபரிமலை கோவிலுக்கு 'விர்ச்சுவல் க்யூ' ஆன்லைன் புக்கிங் மூலம் நாளொன்றுக்கு 30 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 40,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்பாட் புக்கிங் மூலம் 5,000 பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பம்பை, நிலக்கல், எருமேலி, குமளி உள்ளிட்ட 10 மையங்களில் இருந்து ஸ்பாட் புக்கிங் மூலம் 5,000 பேர் வரை பார்வையிடலாம். இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசி அல்லது RT-PCR சான்றிதழ் 72 மணிநேரத்திற்கு முன், கட்டாயம். இருப்பினும், ஐந்து வயதுக்குட்பட்டவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
நீலிமலை வழியாக யாத்திரை விரைவில் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் https://sabarimalaonline.org/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu