சேலத்தில் நீதிபதியை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி - பரபரப்பு

சேலத்தில் நீதிபதியை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி - பரபரப்பு
X
சேலத்தில் நீதிபதியை நீதிமன்ற வளாகத்தில் கத்தியால் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலத்தில், நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் 4வது குற்றவியல் நடுவர் நீதிபதி பொன்பாண்டியனை, நீதிமன்றத்திலேயே அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் இன்று காலை, கத்தியால் குத்தி இருக்கிறார். இதில் லேசான காயங்களுடன் தப்பிய நீதிபதி, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

பணியிட மாற்றம் செய்ததால், நீதிபதி பொன் பாண்டியை அலுவலக உதவியாளர் பிரகாஷ் கத்தியால் குத்தியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. நீதிபதியை, நீதிமன்றத்தில் வைத்து அவரது உதவியாளரே கொல்ல முயன்ற சம்பவம், அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story