ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்கும் முன் கண்டிப்பாக இதனை செய்யுங்கள்

நமது அன்றாட வாழ்வில் ஏ.டி.எம். இயந்திரங்கள் முக்கிய இடத்தை பிடிக்கிறது. என்னதான் டிஜிட்டல் முறையில் செல்போன் மூலம் பணப்பரிவர்த்தனை ஒரு புறம் மின்னல் வேகம் எடுத்து வந்தாலும் சாதாரண ஏழை முதல் வசதி படைத்தவர்கள் வரை வங்கிக்குள் நுழைவதை தவிர்த்து பணம் எடுக்க நினைப்பவர்கள் அதிக அளவில் ஏ.டி.எம். மையங்களை தான் நாடுகிறார்கள்.
இந்நிலையில் ஏ.டி.எம். இயந்திரங்களில் நமது ரகசிய எண்ணை தெரிந்து கொண்டு எப்படியோ பணத்தை திருடும் கும்பல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது. பணம் எடுத்து விட்டு வந்த பின்னர் நமது அக்கவுண்டில் இருக்கும் பணம் திருட்டு போய்விடுகிறது என இது தொடர்பான புகார்கள் சைபர் கிரைம் போலீசில் அதிக அளவில் பதிவாகிறது.
இதுபோன்ற மோசடி கும்பல்களின் பிடியில் சிக்காமல் இருப்பதற்காகவும், நமது பணத்தை பாதுகாப்பான முறையில் எடுப்பதற்கும் இந்திய ரிசர்வ் வங்கி யோசனை வழங்கி உள்ளது.
அது என்ன யோசனை என்பதை இங்கே பார்ப்போம்.
ஏ.டி.எம். இயந்திரத்தில் நமது ரகசிய எண்ணுடன் கூடிய கார்டை சொருகுவதற்கு முன்பாக இயந்திரத்தில் உள்ள கேன்சல் என்ற பட்டனை இரண்டு முறை அழுத்த வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு முன்னதாக ஏ.டி.எம். இயந்திரத்தை பயன்படுத்தியவர் உங்களது ஏ.டி.எம். ரகசிய குறியீடு எண் அதாவது பின்நம்பரை திருடுவதற்கு முயற்சி செய்திருந்தாலோ அல்லது பணம் திருடும் நோக்கில் கொள்ளையர்கள் ஏதாவது செய்து வைத்திருந்தாலோ அதனை இந்த செயல் முறியடித்து விடும். இதன் மூலம் உங்களது பணத்தை யாரும் திருட முடியாது. எனவே பொதுமக்கள் எந்த ஏ.டி.எம். எந்திரத்திலும் பணம் எடுக்கும் முன்பாக கண்டிப்பாக இரண்டு முறை கேன்சல் பட்டனை அழுத்திய பின்னர் பணம் எடுப்பதற்காக ரகசிய குறியீடு எண்ணை பதிவு செய்யும்படி ரிசர்வ் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu