நண்பகல் நிலவரப்படி 7.9 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது, அமைச்சர் தகவல்

நண்பகல் நிலவரப்படி 7.9 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது, அமைச்சர் தகவல்
X

தென்காசியில் பேட்டி அளித்த அமைச்சர் சுப்ரமணியன்.

தமிழகத்தில் நண்பகல் நிலவரப்படி 7.9 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், தென்காசி, புளியரை, ஆகிய பகுதியில் நடைபெறும் முகாமினை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து புளியரை பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:-

தமிழகத்தில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. நண்பகல் 12-மணி நிலவரப்படி 7 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் நண்பகல் நிலவரப்படி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

அதிகமான மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்துவதால் சில இடங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நாளை முகாம் மூலம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக-கேரள இல்லை ஒட்டிய மாவட்டங்களில் அதிகமான இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் 100 சதவீத தடுப்பூசி செலுத்தும் நோக்கில் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் மருத்துவ கழிவுகள் கொட்டுவதாக புகார் வந்துள்ளது. வருவாய்த்துறை மற்றும் காவல்துறை இணைந்து அதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்டங்களான தென்காசி ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு புதிய மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களை கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வு தொடர்பாக மாணவர் தற்கொலை வருத்தமளிக்கிறது. நீட் தேர்வுக்கு விலக்களிக்க தமிழக சட்டமன்றத்தில் நாளை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட உள்ளது.

கடந்த ஆட்சி காலத்தில் போல் இல்லாமல் குடியரசுத் தலைவரால் நிராகரிக்க முடியாத அளவிற்கு தீர்மானம் வலுவாக இயற்றபடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின்போது தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், திமுக மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்