ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ரவுடி சுட்டுக்கொலை: தனிப்படை போலீசார் அதிரடி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ரவுடி சுட்டுக்கொலை: தனிப்படை போலீசார் அதிரடி
X
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய ரவுடி திருவேங்கடத்தை இன்று தனிப்படை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய ரவுடி திருவேங்கடத்தை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து வந்தபோது, அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றதால் தனிப்படை போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் இன்று நடந்துள்ளது.

சென்னையில் கடந்த ஜூலை 5ம் தேதி, பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் 8 பேர் கும்பலால் ஆதரவாளர்கள் முன் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 11 குற்றவாளிகளை போலீசார் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் 11 குற்றவாளிகளையும் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர்.

அதில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்தது தொடர்ந்து அதனை போலீசார் பறிமுதல் செய்வதற்கு ஒருவரை போலீசார் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்றபோது அங்கிருந்து அந்த குற்றவாளி தப்பிக்க முயன்றதாகவும், அப்போது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் குற்றவாளி இறந்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

ரவுடி திருவேங்கடம் சுட்டுக்கொன்ற பகுதியில் போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். என்கவுன்டர் செய்யப்பட்ட திருவேங்கடம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A-3 குற்றவாளி ஆவார். இடது மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் 2 ரவுண்ட் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா