நிலக்கடலை விதைகள் கூடுதல் விலைக்கு விற்பனை: துணை இயக்குனர் எச்சரிக்கை
அரியலூர் மாவட்டத்தில், நிலக்கடலை விதைகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் கோவிந்தராசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர், ஆண்டிமடம்,ஜெயங்கொண்டம் வட்டா ரங்களில், கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. நிலக்கடலையில் நல்ல விளைச்சல் பெற தரமான விதைகளை கொண்டு விதைப்பு செய்வது மிகவும் முக்கியமானதாகும்.நல்ல தரமான விதைகளை விவசாயிகளுக்கு கிடைத்திட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றுத் துறை தேவையான நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விதைகளை வாங்கும் போது அரசினால் விதை விற்பனை செய்ய உரிமம்பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும். விதைகள் வாங்கும் போது உரிய விற்பனை ரசீதுகேட்டுப் பெற வேண்டியது மிகவும் அவசியமாகும். விற்பனை ரசீதினை அறுவடை முடியும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
நில கடலை விதைகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் விற்பனை உரிமம் பெற்று இருக்க வேண்டும். நல்ல முளைப்புத் திறன் உள்ள நிலக்கடலை விதைகளை விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு விற்றாலோ எடைகுறைவாக விற்றாலோ ரசீது இல்லாமல் விற்றாலோ விதைச்சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விதை களை வேளாண் விரிவாக்க மையங்களில் பெறலாம்.
இவ்வாறு விதை ஆய்வு துணை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu