ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்த முயன்ற 19 வயது இளைஞர் கைது

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்த முயன்ற 19 வயது இளைஞர் கைது
X
ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்த முயன்ற 19 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (19). இவர் இலையூர் கிராமத்தைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியை கடந்த சில தினங்களாக காதலித்ததாகவும், இதனை அறிந்த மாணவியின் பெற்றோர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுமியை இளைஞர் திருமணம் செய்ய ஆசை வார்த்தைகள் கூறி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோவை வைத்து இளைஞர் மாணவியின் குடும்பத்தை மிரட்டியதாகவும், திருமணம் செய்ய ஒப்புகொள்ள மறுத்ததால் கொலைமிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

மாணவியின் குடும்பத்தார் இதற்கு அஞ்சாததால், சிறுமியை திருமணம் செய்து கொள்வதற்காக செந்தில்குமார் கடத்த முயன்றுள்ளார்.

இதுகுறித்து மாணவியின் தாயார் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் செந்தில்குமாரை பிடித்து விசாரணை செய்து அவர் மீது வழக்குப் பதிந்து கொலை மிரட்டல் மற்றும் போக்சோ சட்டத்தில் கீழ் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். மேலும் மாணவியை கடத்த செந்தில்குமாருக்கு உடந்தையாக இருந்த, இலையூர் கிராமத்தைச் சேர்ந்த அவரது அக்காள் சித்ரா, இலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த உறவினர்கள் பூவரசன், செல்வகுமார் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!