ஆண்டிமடம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்ஸோவில் கைது

ஆண்டிமடம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்ஸோவில் கைது
X
ஆண்டிமடம் அருகே சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்தவர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்தவர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.

ஆண்டிமடம் அடுத்த சிலம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து மகன் சின்னதம்பி (26). கூலி தொழிலாளியான இவர், கடலூர் மாவட்டத்திலிருந்து சிலம்பூர் வந்து தங்கி 10 ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை, காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 31ம் தேதி சிறுமி புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார், சின்னதம்பியை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.

Tags

Next Story