நர்சிங் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது

நர்சிங் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்  கைது
X

கைது செய்யப்பட்ட ராஜேஷ்.

மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கூலி வேலை செய்து வருகிறார். . இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயங்கொண்டம் தனியார் நர்சிங் கல்லூரியில் பயிலும் 17 வயது மாணவியை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் ராஜேசை கண்டித்துள்ளனர்.இருப்பினும் ராஜேஷ் கேட்காமல் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம். செய்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர்கள் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ராஜேஷ் மற்றும் 17 வயது மாணவி இருவரையும் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷ் மீது வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!