ஜெயங்கொண்டம் அருகே 12-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த இளைஞர் கைது

ஜெயங்கொண்டம் அருகே 12-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த இளைஞர் கைது
X

கைது செய்யப்பட்ட இளையபாரதி.

ஜெயங்கொண்டம் அருகே 12ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கடாரங்கொண்டான் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் இளையபாரதி(23) ஐடிஐபடித்து முடித்து விட்டு கூலி வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 17 வயது மாணவியை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த சிறுமியை இளையபாரதி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதில் சிறுமி மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார். இது குறித்து சிறுமி தானும் இளையபாரதி இருவரும் காதலித்து வந்ததாகவும் தன்னை வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இதனால் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை செய்து இளையபாரதி மீது வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகிறார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!