ஜெயங்கொண்டத்தில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி

ஜெயங்கொண்டத்தில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி
X

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ரோஸ் தொண்டு நிறுவனம், சோழன் சிட்டி லயன்ஸ் சங்கம், பரப்ரம்மம் பவுண்டேஷன் சார்பில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


ஜெயங்கொண்டம் ரோஸ் தொண்டு நிறுவனம், சோழன் சிட்டி லயன்ஸ் சங்கம், பரப்ரம்மம் பவுண்டேஷன் சார்பில் தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ரோஸ் தொண்டு நிறுவனம், சோழன் சிட்டி லயன்ஸ் சங்கம், பரப்ரம்மம் பவுண்டேஷன் சார்பில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை ஜெயங்கொண்டம் கே.ஆர்.டி டி.வி.எஸ் ஷோரூம் உரிமையாளரும் லயன்ஸ் மாவட்ட தலைவருமான இராஜன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ரோஸ் தொண்டு நிறுவன இயக்குனர் ஜான். கே.திருநாவுக்கரசு தலைமை வாழ்த்துரை வழங்கினார்.

லயன்ஸ் மாவட்ட தலைவர்கள் ரமேஷ்குமார், ஐயப்பன், சோழன் சிட்டி லயன்ஸ் சங்க செயலர் வெங்கன்ன பாபு பொருளாளர் உதயகுமார், முன்னிலை வகித்தனர்.

விழிப்புணர்வு பேரணியானது ஜெயங்கொண்டம் அன்னை தெரசா செவிலியர் கல்லூரியில் தொடங்கி திருச்சி சாலை, கடைவீதி, நான்கு ரோடு வழியாக சென்று பேருந்து நிலையத்தில் நிறைவுற்றது.

மாணவிகள் சத்தான உணவு உட்கொள்வோம். முத்தான தாய்ப்பாலை அளிப்போம். இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்போம். தாய்ப்பால் கொடுப்பதால் புற்றுநோயை தவிர்க்கலாம். முதல் மூன்று நாட்களுக்கு சீம்பால் கொடுக்க வேண்டும்,அங்கன்வாடி மையத்தை நாடிடுவோம் தாய்-சேய் நலத்தை காத்திடுவோம்,பாதுகாப்போம் பாதுகாப்போம் பச்சிளம் குழந்தைகளை பாதுகாப்போம் என பல்வேறு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி செவிலியர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

முன்னதாக பரப்ரம்மம் பவுண்டேஷன் நிறுவனர் முத்துக்குமரன் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் ஏகம் பவுண்டேஷன் அரியலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அசோகன் நன்றி கூறினார். சமூக விரிவாக்க அலுவலர் ஜெயமங்கலம், நகராட்சி துணை பில் கலெக்டர் சரஸ்வதி, அரியலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!