ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது
X
கைது செய்யப்பட்ட செல்வகணபதி
ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராமம் காலனி தெருவைச் சேர்ந்தவர் செல்வகணபதி. வயது (20) கூலித் தொழிலாளி. இவர்13 வயது சிறுமியிடம் செல்போன் வீடியோ மூலம் பேசி காதலித்து வந்ததாகவும், வீடியோ காலில் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து வைத்துக்கொண்டு சிறுமியை கட்டாயப்படுத்தி ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதை அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் கண்டித்து கேட்டபோது, தகாத வார்த்தைகளால் திட்டி செல்வகணபதி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து செல்வகணபதியை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். மேலும் செல்வகணபதிக்கு உறுதுணையாக இருந்த ராஜா பொன்முடி, அவரது மனைவி கல்யாணி, மகன் கவியரசன் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!