தாயைக் காப்பாற்றக்கோரி அமைச்சர் காலில் விழுந்து கதறி அழுத பெண்: அரசு மருத்துவமனையில் பரபரப்பு
ஜெயங்கொண்டம் அருசு மருத்துவமனையில் அமைச்சர் சிவசங்கரிடம் தாயைக் காப்பப்பற்றக்கோரி கதறி அழுத பெண்ணின் தாயாருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த அமைச்சர்.
உத்திரவிட்டார்.
ஜெயங்கொண்டம் அருசு மருத்துவமனையில் அமைச்சர்கள் சுப்ரமணியன், சிவசங்கர் ஆகியோர் ஆய்வு செய்தபோது தாயைக் காப்பப்பற்றக்கோரி அமைச்சரின் காலை பிடித்துக் கொண்டு பெண் கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்ரமணியன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் இன்று ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு 20 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையம் புதிய கட்டிடம் அமைக்கும் பணியை சுகாதார மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆகியோர் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்திரவிட்டனர்.
அப்போது அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சிவசங்கர் காலில் விழுந்து தனது தாயை காப்பாற்றக்கோரி சரிதா என்ற பெண் கண்ணீருடன் கதறி அழுதார்.தனது தாய்க்கு யாரும் ஆதரவு இல்லை என்றும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்களிடம் உத்திரவிட வேண்டும் என அமைச்சரின் காலை கட்டி பிடித்துக் கொண்டு சரிதா அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் சிவசங்கர் அருகில் இருந்த ஜெயங்கொண்டம் தலைமை மருத்துவரிடம் பேசி சரிதாவின் தாயாருக்கு தேவையான மருத்துவ சோதனைகள் மற்றும் சிகிகிச்சைகள் அளிக்க உத்திரவிட்டார். பின்னர் சரிதாவிடம் ஆறுதல் கூறிய அமைச்சர்கள் அவரின் தாயார் உடல்நலம் பெற்று வீட்டிற்கு வருவார் என்று கூறி சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu