ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாப உயிரிழப்பு

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி பெண்  பரிதாப உயிரிழப்பு
X

மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண்ணை மீட்கும் கிராமத்தினர்.

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கரடிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி அம்சவள்ளி (70). இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு சமையலராக இருந்து ஓய்வு பெற்றவர்.

இவரது கணவர் கலியபெருமாள் கடந்த ஒரு வருடத்திற்கு உயிரிழந்தார். கணவர் உயிருடன் இருக்கும்போது தொடங்கிய வீடுகட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று மாடியில் புதிதாக வைக்கப்பட்டுள்ள சுவற்றிற்கு தண்ணீர் அடிப்பதற்காக மேலே சென்று சுவற்றிற்கு தண்ணீர் அடித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின்கம்பி உரசியதில் அம்சவள்ளி தூக்கியெறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அருகிலிருந்தவர்கள் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அம்சவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!