அரியலூர் மாவட்டத்தில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் அபாயம்

அரியலூர் மாவட்டத்தில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் அபாயம்
X

அரியலூர் மாவட்டம் கோடாலிகருப்பூர் கிராமத்தில் தொடர் கனமழையால் சம்பா நடவு செய்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.


அரியலூர் மாவட்டத்தில் கனமழையால் சம்பா நடவு செய்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தில் சுமார் 5000 ஆயிரம் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தொடர் கனமழையால் சுமார் 100 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர்கள் இயந்திரம் மூலம் மற்றும் கை நடவு செய்த வயல்களில் தண்ணீர் குளம் போல் காட்சியளிக்கிறது.

பொன்னாற்றிலிருந்து வரக்கூடிய இரண்டாம் நம்பர் வாய்க்கால் ரெங்கராஜன் வாய்க்கால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டதாகவும் கடந்த சில ஆண்டுகளாக ரெங்கராஜன் வாய்க்காலை தூர் வார மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசு அதிகாரிகளுக்கும் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தற்போது நடவு செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் மழைநீர் சூழ்ந்து அழுகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கோடாலிகருப்பூர் கிராம விவசாயிகள் பொன்னாற்று பாசனம் மூலம் ஒரு போக சம்பா சாகுபடி மட்டுமே செய்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் இரண்டாம் நம்பர் ரெங்கராஜன் வாய்க்காலை முறையாக தூர் வாரி மழை நீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்