அரியலூர்: வாக்காளர் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணியை கலெக்டர் ஆய்வு

அரியலூர்: வாக்காளர் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணியை  கலெக்டர் ஆய்வு
X

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தமுறை பணியை கலெக்டர் ரமணசரஸ்வதி ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணியை கலெக்டர் ரமண சரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின் படி, 01.01.2022 ஆம் நாளை தகுதிநாளாக கொண்டு அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் 2022ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் 01.11.2021 முதல் 30.11.2021 வரை நடைபெற்று வருகிறது. இச்சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகளுக்கென சிறப்பு முகாமானது 13.11.2021 (சனிக்கிழமை) 14.11.2021 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 20.11.2021 (சனிக்கிழமை) 21.11.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு தினங்களில் அந்தந்த வாக்குசாவடி மையங்களில் நடைபெற்று முடிவடைந்ததில், சேர்க்கைக்கென 6660 விண்ணப்பங்களும், திருத்தம் செய்திட 1063 விண்ணப்பங்களும், முகவரி மாற்றத்திற்கென 482 விண்ணப்பங்கள், நீக்கம் செய்திட 934 விண்ணப்பங்களும் என மொத்தம் 9139 விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், 27.11.2021 (சனிக்கிழமை) மற்றும் 28.11.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு தினங்களில் சிறப்பு முகாமானது அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வருகிறது.

அதன்படி, ஒரத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, படிவங்கள் பெறப்பட்டுள்ள விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

முன்னதாக, திருமானூர் ஒன்றியம், வாரணவாசி ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் கடந்த 20.11.2021 மற்றும் 21.11.2021 ஆகிய தினங்களில் நடைபெற்ற சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து நேரடியாக களஆய்வு மேற்கொண்டு, விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.

இந்தஆய்வின்போது, அரியலூர் கோட்டாட்சியர் ஏழுமலை, வட்டாட்சியர் ராஜமூர்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்