அரியலூர்: குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல்

அரியலூர்: குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல்
X

அரியலூர் மாவட்டம் பாளையக்குடி கிராமத்தில்தண்ணீர் வராததால் அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


அரியலூர் அருகே பாளையக்குடி கிராமத்தில் 1மாதமாக தண்ணீர் வராததால் அப்பகுதி மக்கள் காலிகுடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே பாளையக்குடி கிராமம் கீழத்தெருவில் கடந்த 1 மாதமா தண்ணீர் வராததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வந்த 2 மினி டேங்கும் கடந்த ஒரு வருடங்களாக இயங்கவில்லை. குடிக்க குடிநீரின்றி பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். மேலும் இரவு நேரங்களில் அந்த பகுதியில் மின் விளக்கும் எரியவில்லை. இதனால் தெருக்களில் இருள் சூழ்ந்துள்ளது.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பாளையக்குடி கீழத்தெரு பொதுமக்கள், சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று சேர்ந்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்த தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடை நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
why is ai important to the future