கலெக்டர் தலைமையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராமசபைக்கூட்டம்

கலெக்டர் தலைமையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராமசபைக்கூட்டம்
X

அரியலூர் மாவட்டம் தென்கச்சிப் பெருமாள் நத்தம் கிராமத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. 

அரியலூர் மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராமசபைக்கூட்டம் கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், தென்கச்சிப் பெருமாள் நத்தம் கிராமத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

அரியலூர் மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் கிராம சபைக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், ஊராட்சிப் பகதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினம் விபரங்கள் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II குறித்தும், 2022-23ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகள் குறித்தும், பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மையக் கழிப்பறைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் தனிநபர் சுகாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் ஊட்டச்சத்து இயக்கத்தில் கிராமப்புற மக்களை பங்கு பெறச் செய்வதை பற்றி அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், கிராம ஊராட்சியில் தடைசெய்யப்பட்டுள்ள ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துவதை முற்றிலுமாக தவிர்ப்பது குறித்தும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களான துணி மற்றும் பாத்திரங்கள், பாக்கு மட்டை தட்டுகள், இலைகள், மந்தாரை இலை, துணியால் ஆன கொடிகள், மூங்களில் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்துவது குறித்தும், மீண்டும் மஞ்சப்பபை, திடக்கழிவு மேலாண்மை, ஜல் ஜீவன் திட்டம், விவசாயிகள் கடன் அட்டை வழங்குதல், முதியோர் உதவித்தொகை, குழந்தைகள் அவசர உதவி எண், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி, நமக்கு நாமே திட்டம், வேளாண்மை - உழவர் நலத்துறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) போன்ற பொருட்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

கிராம ஊராட்சி பகுதிகளில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்தல் மற்றும் சுத்தம், சுகாதாரம் மற்றும் பசுமை பேணும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் முன் மாதிரி விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருதிற்கென ஒரு மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு, தலா ரூ.7.50 இலட்சம் ரொக்கப்பரிசும், கேடயமும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திர தின கொண்டாடத்தின்போது இவ்விருது வழங்கப்படும். எனவே, நமது ஊராட்சி இவ்விருதினை பெறும் வகையில் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

மேலும், இக்கூட்டத்தில் பொதுமக்களின் சார்பில் பள்ளிக்கு நிரந்தர குடிநீர் வசதி, தென்கச்சிப் பெருமாள் நத்தம் ஊராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ள வீடுகளில் மோட்டார் பயன்படுத்துவது குறித்து தெரிவிக்கப்பட்டு, அதனை தவிர்த்திடவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களின் சார்பில் பகுதிநேர அங்காடி கடை அமைத்திடவும், பேருந்து வசதி குறிப்பிட்ட நேரம் மட்டுமே வருவதாகவும், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் நேரம் மற்றும் மதிய நேரம் ஒரு முறை பேருந்து வசதி செய்ய கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கை குறித்து போக்குவரத்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், ஒன்றியக்குழுத்தலைவர் மகாலெட்சுமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், ஊராட்சி மன்றத்தலைவர்ஆனந்தவள்ளி, தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!