அரியலூர்: புதிய கால்நடை மருந்தகங்களை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைப்பு
அரியலூர் மாவட்டத்தில் புதிக கால்நடை மருந்தக கட்டிடங்களை திறந்து வைத்து பயனாளிகளுக்கு உதவி வழங்கினார் அமைச்சர் சிவசங்கர்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம், பெரியகிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் புதிய கால்நடை மருந்தகக் கட்டிடங்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு, கால்நடை மருந்தகங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் நபார்டு வங்கியின் நிதி உதவி மூலம் கால்நடை பராமரிப்புத்துறையில் கால்நடை மருந்தகங்கள் தமிழக அரசால் கட்டப்பட்டு வந்துள்ளது. இதன் ஒரு கட்டமாக ஆண்டிமடம், ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஆண்டிமடம் கால்நடை மருந்தகம் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் அதற்கு மாற்றாக ரூ.34.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், பெரியகிருஷ்ணாபுரம் மற்றும் இடைக்கட்டு ஆகிய கால்நடை மருந்தகங்கள் அந்த கிராமங்களில் கால்நமை மருந்தக கட்டிடம் இல்லாத காரணத்தினால் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் இந்த இரண்டு ஊராட்சிகளிலும் புதிதாக நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் கால்நடை மருந்தகங்கள் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார். மேலும், சிறப்பாக கறவை பசுக்களை பராமரித்தவர்களுக்கு பால் கலன்களை வழங்கினார்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம் என்ற வகையில் கால்நடை மருந்தகங்கள், கால்நடை கிளை நிலையங்கள் இல்லாத குக்கிராமங்களிலும் உள்ள விவசாயிகளுக்கு தங்களது கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சை, தடுப்பூசி போடுதல், குடற்புழுநீக்கம் செய்தல், ஆண்மை நீக்கம் செய்தல், சினை ஊசி போடுதல், மேலும் விஞ்ஞானரீதியில் கால்நடைகளை வளர்த்து பொருளாதார முன்னேற்றம் அடைந்திட தேவையான கால்நடைகள் குறித்த சிறப்பு ஆலோசனைகளுக்கும் அவர்களது ஊரினிலே கொண்டு சேர்க்கும் வகையில் சிறப்பு கால்நடை மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும் என ஆணiயிட்டதின் முதல் கட்டமாக அரியலூர் மாவட்டத்தில் பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்தில் இத்திட்டதினை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் இந்த வருடத்தில் மொத்தம் 120 முகாம்கள் நடைபெறவுள்ளது. இதற்காக முகாமிற்கு 10 ஆயிரம் நிதி செலவில் மொத்தம் ரூ.12 இலட்சம் நிதி உதவியில் செயல்படுத்தப்படவுள்ளது. எனவே, உங்களை உங்களின் வீடு தேடி வரும் இந்த சிறப்பு கால்நடை மருத்துவ முகாமிற்கு அனைத்து விவசாயப் பெருமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் சூனாபுரி, விளந்தை, பெரிய கிருஷ்ணாபுரம், திருக்களப்பூர், காடுவெட்டி ஆகிய பகுதிகளில் ரூ.37 இலட்சத்து 39 ஆயிரத்து 830 மதிப்பில் புதிய மின் மாற்றிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (கால்நடைப்பராமரிப்புத்துறை) எம்.ஹமீது அலி, செயற்பொறியாளர் (இயக்குதலும், காத்தலும்) செல்வராஜ், ஆண்டிமடம் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu