வரதராஜன்பேட்டை பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் போட்டியின்றி தேர்வு

வரதராஜன்பேட்டை பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் போட்டியின்றி தேர்வு
X
வரதராஜன் பேட்டை பேரூராட்சி தலைவர், துணை தலைவர் சட்டமன்ற உறுப்பினருடன் உள்ளனர்.
அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் திமுக கவுன்சிலர்கள் தலைவர் மற்றும் துணைத்தலைவர்களாக போட்டியின்றி தேர்வு

அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டை பேரூராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் 15 வார்டுகளில் தி.மு.க.வில் 7 கவுன்சிலர்களும், சுயேச்சையாக 8 கவுன்சிலர்களும் வெற்றிபெற்றனர்.

இதனையடுத்து வரதராஜன்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் தலைவராக மார்கிரேட் மேரியும், துணைத்தலைவராக எட்வின் ஆர்தரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

வரதராஜன்பேட்டை பேரூராட்சி தலைவர் மார்கிரேட் மேரிக்கும், துணை தலைவர் எட்வின் ஆர்தருக்கும் வார்டு கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனையடுத்து ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ க.சொ.க.கண்ணனை வரதராஜன்பேட்டை பேரூராட்சி தலைவர் மார்கிரேட் மேரியும், துணை தலைவர் எட்வின் ஆர்தரும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

வரதராஜன்பேட்டை பேரூராட்சி தலைவர் மார்கிரேட் மேரிக்கும், துணை தலைவர் எட்வின் ஆர்தருக்கும் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் வாழ்த்து தெரிவித்தார்.

ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ரெங்க.முருகன், வரதராஜன்பேட்டை பேரூர் கழக பொறுப்பாளர்கள் அல்போன்ஸ், செல்வம், முன்னாள் பேரூராட்சி தலைவர் அந்தோணிசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
மனிதன் கனவு கண்ட காலத்தை இயந்திரம் உருவாக்கும் காட்சி – AIன் காலச்சுவடு!