சுயேட்சை வேட்பாளர்கள் ஆதிக்கம் நிறைந்த வரதராஜன் பேட்டை பேரூராட்சி

சுயேட்சை வேட்பாளர்கள் ஆதிக்கம் நிறைந்த வரதராஜன் பேட்டை பேரூராட்சி
X

பைல் படம்.

அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டை பேரூராட்சியில் சுயேட்சை வேட்பாளர்கள் ஆதிக்கம் அரசியல் கட்சிகளை பரிதவிக்க விட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டை பேரூராட்சி 15 வார்டுகளில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 500. பெண் வாக்காளர்களின்எண்ணிக்கை 3 ஆயிரத்து 701. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7ஆயிரத்து 201. தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டுகளில் 1,2,6,8,9,10,11,13 வரை பெண்களுக்கும், வார்டுகள் 3,4,5,7,12,14,15பொதுவானதாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. 14, தி.மு.க 13, பா.ஜ.க, காங்கிரஸ், வி.சி.க தலா 1, நாம்தமிழர் 6,பா.ம.க. 3, அ.ம.மு.க 8, சுயேட்சை 28 என்று மொத்தம் 75 பேர் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க.வும், தி.மு.க.வும்11 வார்டுகளில் நேருக்கு நேராக மோதுகின்றனர்.

சுயேட்சைகள் 5 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்றதையடுத்து 70 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. களத்தில் சுயேட்சை வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கை உள்ளதால் ஓட்டுகளை பிரித்து விடுவார்களோ என்ற கலக்கம் கட்சி வேட்பாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil