வன்னியர் சங்க செயலாளர் வைத்தி விரக்தியில் விலகல்
பொறுப்பிலிருந்து விலகிக்கொள்கிறேன் மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி சமூக வலைவளத்தில் பதிவு
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்த வைத்தி என்கிற வைத்திலிங்கம். இவர் வன்னியர் சங்கத்தலைவராக காடுவெட்டி குரு இருந்த போது பா.ம.க மாவட்ட செயலாளராகவும், பிறகு மாநில துணை பொதுச்செயலாளராகவும் இருந்தார். காடுவெட்டி குரு மறைவுக்கு பிறகு மாநில வன்னியர் சங்க செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில் பா.ம.க வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு அறிவிக்கப்பட்டதில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக பாம.க வழக்கறிஞர் பாலு அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து வன்னியர் சங்க செயலாளர் வைத்தி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
உழைப்புக்கு மதிப்பில்லை நடிப்புக்கு மட்டுமே மதிப்பு. இன்று முதல் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்தும், வன்னியர் சங்க மாநில செயலாளர் பொறுப்பிலிருந்தும் விலகி கொள்கிறேன். இது வரை ஆதரவு தந்த பா.ம.க - வன்னியர் சங்க சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். என்றும் சமுதாயப்பணியில் வைத்தி. எனக்கூறி முடித்துள்ளார்.
ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலின் போது சேர்மேன் பதவி தரவில்லை எனக்கூறி அதிருப்தியில் இருந்த வைத்தி, சில தினங்களுக்கு பிறகு கட்சி பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் இன்று ஆண்டிமடத்தில் செய்தியாளர்களை சந்தித்து தனது முடிவிற்கான காரணங்களை வைத்தி வெளியிட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு பாமக வட்டாரத்திலும், ஜெயங்கொண்டம் பகுதியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu