கார் டிரைவர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை

கார் டிரைவர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை
X

அரியலூர் மாவட்டம் புதுச்சாவடியை சேர்ந்தவர் அபிபுல்லாவீட்டின் முன்பு 3 பெட்ரோல் பாட்டில்களும் பேப்பர் உள்ளிட்ட பொருட்கள் வெடித்து சிதறி இருந்தன.


பெரிய அளவில் சப்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் முன்புறம் 3 பெட்ரோல் குண்டுகள் வெடித்து சிதறிக்கிடந்தன

அரியலூர் மாவட்டம், புதுச்சாவடியில் கார் டிரைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம், புதுச்சாவடியை சேர்ந்தவர் அபிபுல்லா. இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில், மனைவி மற்றும் இளைய மகளுடன் வசித்து வருகிறார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அபிபுல்லா, தற்போது ஜெயங்கொண்டத்தில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டின் முன்பு மிகப்பெரிய அளவில் சப்தம் கேட்டதும், வெளியே வந்து பார்த்தபோது 3 பெட்ரோல் குண்டுகள் வெடித்து சிதறிக் கிடந்தது தெரிய வந்தது.



இதனால் அதிர்ச்சி அடைந்த அபிபுல்லா, ஜெயங்கொண்டம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும், அபிபுல்லா மீது யாருக்காகவது முன்விரோதம் உள்ளதா அல்லது பணம் கொடுக்கல், வாங்கலில் ஏதாவது தகராறு இருக்கிறதா என் பல்வேரு கோணங்களில் போலீசார் விசாரனை நடத்திவருகின்றனர். ஜெயங்கொண்டம் பகுதியில் பலவருடங்களுக்கு பிறகு நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!