உடையார் பாளையம்: கண்ணனூர் மகா மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா

உடையார் பாளையம்: கண்ணனூர் மகா மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா
X

உடையார் பாளையம் அருகே கண்ணணூர் மாரியம்மன்கோவில் தெப்ப திருவிழா நடந்தது.

உடையார் பாளையம்: கண்ணனூர் மகா மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா மிக சிறப்பாக நடந்தது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வேலப்பன் செட்டிக்கரை கீழக்கரையில் கண்ணனூர் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தெப்பத்திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 22-ந் தேதி காஞ்சிவார்த்தல், ஊரணி பொங்கல் வைத்து சாமியை வழிபட்டனர். 23-ந் தேதியன்று இரவு அம்மன் வீதியுலாவும், 24-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், 25-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 26-ந் தேதி மகா அபிஷேகம் மற்றும் சந்தன காப்பும் நடைபெற்றது.

தெப்பத்திருவிழாவை முன்னிட்டு கண்ணனூர் மகா மாரியம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் வஸ்திரம் சாத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் கண்ணனூர் மாரியம்மனை எழுந்தருள செய்து, வேலப்பன் செட்டி ஏரியை சுற்றி தெப்பம் 3 முறை வலம் வந்தது.

இதில் உடையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தெப்பத்திருவிழாவை கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி குழு பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!