ஜெயங்கொண்டத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற இருவர் கைது

ஜெயங்கொண்டத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற இருவர் கைது
X

லாட்டரி சீட்டுக்கள் விற்பனை  செய்ததாக கைது  செய்யப்பட்ட இருவர்.

ஜெயங்கொண்டத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜெயங்கொண்டம் பகுதியில் வெளி மாநில மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அரியலூர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் நகரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற 2 நபர்களை பிடித்து விசாரித்ததில், அவர்கள் ஜெயங்கொண்டம் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் குருமூர்த்தி (39) கழுவந்தோண்டி கிராமம் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த ராமானுஜம் மகன் செல்வமணி(43) என்பதும், இருவரும் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்திருந்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இருவரிடம் இருந்து 394 கேரளா லாட்டரி சீட்டுகளும், லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த வகையில் ரூ 2960 /- பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

குருமூர்த்தி, செல்வமணி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!