ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
X
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜெயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர்(பயிற்சி)சங்கர் கணேஷ் தலைமையிலான போலீசார் சின்னவளையம் கிராமப் பகுதிகளில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது இவர்களை கண்டதும் ஓடிய 2 பேரை காவல் துறையினர் மடக்கி பிடித்து விசாரித்ததில், தா.பழூர் அருகேயுள்ள இருகையூர் காலனித் தெருவைச் சேர்ந்த காமராஜ் மகன் பிரபாகரன்,ஜெயங்கொண்டம் காந்தி நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் கணேசன் என்பதும், இவர்கள் கஞ்சா விற்றுக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!