அரியலூர் மாவட்ட இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி

அரியலூர் மாவட்ட இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி
X

அரியலூர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Education Training -அரியலூர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு மாணவர்களுக்கு கற்பித்தல் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

Education Training -அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்துக்குட்பட்ட இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு உயர் தொடக்க நிலை மாணவர்களுக்கு கற்பித்தல் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. தா.பழூர், காரைக்குறிச்சி, சுத்தமல்லி, கோடாலிகருப்பூர், வெண்மான்கொண்டான், விக்கிரமங்கலம், நாயகனைப்பிரியாள், ஸ்ரீபுரந்தான் ஆகிய குறுவள மையங்களில் 2 நாள் பயிற்சி நடைபெற்றது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுதா, வட்டார கல்வி அலுவலர்கள் அசோகன், சாந்திராணி, இல்லம் தேடி கல்வி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் சேகர் ஆகியோர் பயிற்சிகளை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆசிரிய பயிற்றுனர்கள் இளவழகன், ஜெய்சங்கர், சம்பத், அந்தோணிதாஸ், சிவா மற்றும் கருத்தாளர்கள் இல்லம் தேடிக்கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சிகளை வழங்கினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு