அரியலூர் மாவட்டம் திருக்களப்பூர் பெரிய ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருக்களப்பூர் பெரிய ஏரியில் ஆக்கிரமிப்பினை அதிகாரிகள் அகற்றினர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள திருக்களப்பூர் பகுதியில் உள்ள பெரிய ஏரி சுமார் 98 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகவும் பழமை வாய்ந்த ஏரியாகும்.
இந்த ஏரியில் உள்ள நீரைக் கொண்டு இதை சுற்றி உள்ள திருக்களப்பூர், கோவில் வாழ்க்கை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் இரண்டு மதகு மூலம் சுமார் ஆயிரம் ஏக்கர் பாசனம் பெற்று வந்தது. தற்போது தூர்வாரப்படாத நிலையில் கரைகள் இல்லாத காரணத்தினாலும் ஆக்கிரமிப்புகள் அதிகமான நிலையில் ஏரி மூலம் பாசனம் குறைந்தது.
தற்பொழுது தமிழக அரசு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி வரும் நிலையில் பெரிய ஏரியில் உள்ள நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலங்களில் பொதுமக்கள் நெல், எள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து வந்தனர். தற்போது நெல் அறுவடை முடிந்த நிலையில் எள் விதைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் டிராக்டர் மூலம் பயிர் சாகுபடியை அழித்து ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அளவீடு செய்யப்பட்ட பகுதிகளில் கரை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu