டிப்பர் லாரி மோதி தனியார் கல்லூரி பேருந்து டிரைவர் பலி

ஜெயங்கொண்டம் அருகே ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் பைக்கில் வந்த தனியார் கல்லூரி பேருந்து டிரைவர் பலியானார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கட்சிபெருமாள் கிராமத்தை சேர்ந்த குமார் இவரது மகன் அருண்குமார் வயது (22). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று மதியம் தனது வீட்டிலிருந்து உடையார் பாளையத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் உடையார்பாளையத்திலிருந்து கட்சிப்பெருமாள் கிராமதில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். . அப்போது எதிரே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஜல்லிகள் ஏற்றி வந்த லாரி. அருண்குமார் பைக் மீது மோதியது.

இதில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த உடையார்பாளையம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்

Tags

Next Story
ai future predictor 2025