தா.பழூர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட எம்எல்ஏக்கள்

தா.பழூர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட எம்எல்ஏக்கள்
X
தா.பழூர் ஊராட்சிஒன்றியஅலுவலகத்தில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை எம்எல்ஏக்கள் கண்ணன், சின்னப்பா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.


தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை எம்எல்ஏக்கள் கண்ணன், சின்னப்பா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, அரியலூர் சட்டமன்ற தொகுதி ஆகியவற்றிற்கு, தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கினங்க, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழிகாட்டுதலின்படி, "பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள்" பெறும் நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சொ.க. கண்ணன், கு.சின்னப்பா ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் வட்டாட்சியர் ஸ்ரீதரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார் (வ.ஊ), அன்புச்செல்வன் (கி.ஊ), கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள்,பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!