பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டது

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டது
X

குழவடையான் கிராமத்தில் சுற்றி திரிந்த முதலை பிடிபட்டது.

குழவடையான் கிராமத்தில் பிடிபட்ட முதலையை வனத்துறையினர் அனைக்கரை கொள்ளிடம் ஆற்றில் விட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

குழவடையான் கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக முதலை ஒன்று பகல் முழுவதும் குளத்தில் தங்கிவிட்டு இரவு நேரங்களில் விளைநிலங்களில் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. கால்நடைகளான ஆடு மற்றும் மாடுகள் கடித்து சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் பயத்துடன் வாழ்ந்து வந்தனர்.

இதனையடுத்து கிராம பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் ஒரு நாள் முழுவதும் முகாமிட்டு முதலையை தேடியும் கிடைக்கவில்லை. இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி மீனவர்கள் கடந்த ஒரு மாத காலமாக முதலையை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை மீனவர்கள் விளைநிலங்களில் சுற்றி வந்த முதலையை பிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து முதலையை ஒப்படைத்தனர்.

இதனையடுத்து வனத்துறையினர் குழவடையான் கிராமத்தில் சுற்றி திரிந்த முதலையை மீனவர்களிடம் இருந்து மீட்டு அணைக்கரை கீழணை கொள்ளிடத்தில் சென்று பத்திரமாக விட்டனர். விளை நிலங்களில் சுற்றித்திரிந்த முதலையை பிடித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags

Next Story