கண்டா வர சொல்லுங்க கொரோனா விழிப்புணர்வு பாடல் பாடி விழிப்புணர்வு

கண்டா வர சொல்லுங்க கொரோனா விழிப்புணர்வு பாடல் பாடி விழிப்புணர்வு
X

ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் நகராட்சி ஆணையர் சுபாஷினி தலைமையில், நகராட்சி ஊழியர் சரஸ்வதி, கொரோனா விழிப்புணர்வு பாடலைப் பாடி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


கொரோனா விழிப்புணர்வு பாடல் பாடி ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கண்டா வர சொல்லுங்க என்ற பாடல் ராகம் மூலம் கொரோனா விழிப்புணர்வு பாடல் பாடி ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கொரோனா மூன்றாம் அலை துவங்க உள்ளதாக பல்வேறு அமைப்புகள் தெரிவித்து வரும் நிலையில் கடந்த 2 தினங்களாக சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் கொரோனா அதிகரித்து வருவதாக சுகாதார துறை அறிவித்துள்ளது. மேலும் பொது மக்கள் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்கவேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கி வந்தாலும். தமிழக அரசு சில தளர்வுகள் அறிவித்த நிலையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு இன்றி, கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர்.

இதனை தடுக்கும் பொருட்டு ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் இன்று நான்கு ரோடு சந்திப்பில் நகராட்சி ஆணையர் சுபாஷினி தலைமையில், நகராட்சி ஊழியர் சரஸ்வதி, கொரோனா விழிப்புணர்வு பாடலைப் பாடி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். காலையில் முக கவசம் அணியாமல் சென்றவர்களிடம் முககவசம் வழங்கியும், தடுப்பூசியை செலுத்திக்கொள்ள அறிவுரையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

Tags

Next Story