/* */

பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய கணித ஆசிரியர் போக்சோவில் கைது

சுந்தரேசபுரம் கிராமத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்திய கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய கணித ஆசிரியர் போக்சோவில் கைது
X

கைது செய்யப்பட்ட ஆசிரியர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சுந்தரேசபுரம் கிராமத்தில் ஜெயம்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் உரிமையாளரின் உறவினரான தினேஷ் அதேப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக மாணவியின் பெற்றோர் பலமுறை கண்டித்தும் அதனை பொருட்படுத்தாமல் போனிலும் நேரிலும் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.இதனால் பெண்ணின் பெற்றோர்கள் மாணவியை பள்ளியில் இருந்து படிப்பை இடையில் நிறுத்தி விட்டனர். இருந்தபோதிலும் தினேஷ் தொடர்ந்து போனில் மாணவியை தொடர்பு கொண்டு பேசி வந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து மாணவியிடம் ஆசிரியர் தினேஷ் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு பேசியதால் மாணவியின் பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.இது குறித்து புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலிசார் தினேஷ் மீது வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 11 Sep 2022 1:06 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  3. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  5. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  6. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  7. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  8. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது