காரைகுறிச்சி லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் காட்சி
அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த காரைக்குறிச்சி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் 10 தேதிக்கு மேல் லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நடைபெறும்.
தமிழ்மாதத்தில் சித்திரை மாதம் தொடக்கம் என்பதால் இம்மாதத்தில் சூரியபகவான் வலம் வந்து ஈசனை வழிபடுவதாக ஐதீகம். அதன்படி இன்று காலை 6:10 மணிக்கு சூரிய உதயமானது. அப்போது அதிலிருந்து பிரதிபலிக்கப்பட்ட ஒளிக்கதிரானது நேரிடையாக லிங்கத்தின் மீது பட்டு பொன்னொளியில் ஒளிர்ந்தது.
இந்த நிகழ்வானது சுமார் 10 நிமிடம் வரை நீடித்தது. இந்த அரிய காட்சியை காண்பதற்கு கொரோனோ விதிமுறைகள் காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஒருசிலரே தரிசனம் செய்தனர். இந்த அரிய நிகழ்வானது இன்னும் ஓரிரு நாட்களில் மட்டுமே நிகழலாம் என பக்தர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu