ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் கோடை கால தண்ணீர் பந்தல்கள் திறப்பு

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் தண்ணீர் பந்தல்களை க.சொ.க. கண்ணன் எம்.எல்.ஏ.திறந்து வைத்தார்.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில், தமிழக முதல்வர் ஆணைக்கினங்க, உதயநத்தம், சிலால் (பொற்பதிந்தநல்லூர்), அணைக்குடம், சோழன்மாதேவி, கோடாலிகருப்பூர், ஆகிய ஊர்களில் கோடை கால தண்ணீர் பந்தல்களை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், பொதுக்குழு உறுப்பினர் இரா.அண்ணாதுரை, மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் என்.ஆர்.இராமதுரை, ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் எஸ்.சூசைராஜ், எஸ்.ஆர்.தமிழ்செல்வன்,த.நாகராஜன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் கோவி.சீனிவாசன், இரா.சங்கர், சி.கண்ணதாசன், கே.எஸ்.ஆர்.கார்த்திக், தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் த.சம்பந்தம், ஒன்றிய அணி அமைப்பாளர்கள் வெ.பாலசுப்ரமணியன், க.சேகர், செ.இளங்கண்ணன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் க.ராஜா, சி.தனசீலன், அ.பிரபாகரன், தொ.மு.ச. நளராசன் மற்றும் கிளை கழக செயலாளர்கள், தி.மு.க. முன்னோடிகள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu