திறனாய்வு தேர்வு வெற்றித் தொகையை கொரோனா நிதிக்கு வழங்கிய பள்ளி மாணவர்கள்

திறனாய்வு தேர்வு வெற்றித் தொகையை கொரோனா நிதிக்கு வழங்கிய பள்ளி மாணவர்கள்
X

கொரோனா நிவாரண நிதி வழங்கிய மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் எம்எல்ஏ கண்ணன்.

ஜெயங்கொண்டத்தில் திறனாய்வு தேர்வில் வெற்றிபெற்ற தொகையை பள்ளி மாணவர்கள் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினர்.

ஜெயங்கொண்டத்தில் திறனாய்வு தேர்வில் வெற்றிபெற்ற தொகையை பள்ளி மாணவர்கள் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினர்.

ஜெயங்கொண்டம் தெற்குஒன்றியம், புதுச்சாவடியை சேர்ந்த மன்சூர் அலியின் மகன்கள் அஹமது இப்ராஹிம், முஹமது இப்ராஹிம் ஆகியோர் கங்கைகொண்டசோழபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் கல்வி பயின்று வருகின்றனர்.

இம்மாணவர்கள் இருவரும் தேசிய அளவில் நடைபெற்ற திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற ஸ்காலர்ஷிப் தொகை ரூ.9000 த்தை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண பணிக்காக ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணணிடம் வழங்கினார்கள்.

பின்னர், அந்த மாணவர்களை பாராட்டிய எம்எல்ஏ கண்ணன், அவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி கவுரவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!