ஸ்ரீபெரியநாயகி உடனுறை பெருவுடையார் ஆலய பௌர்ணமி கிரிவல பெருவிழா

ஸ்ரீபெரியநாயகி உடனுறை பெருவுடையார் ஆலய பௌர்ணமி கிரிவல பெருவிழா
X

மாமன்னன் இராசேந்திரசோழன் இளைஞர் அணி சார்பில் கங்கை கொண்ட சோழபுரம் ஸ்ரீ பெரியநாயகி உடனுறை பெருவுடையார் ஆலய ஆனி மாத பௌர்ணமி கிரிவலத்தில்  பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.


கங்கை கொண்ட சோழபுரம் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை பெருவுடையார் ஆலய ஆனி மாத(57-ஆம்) பௌர்ணமி கிரிவல பெருவிழா நடைபெற்றது.

மாமன்னன் இராசேந்திரசோழன் இளைஞர் அணி சார்பில் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை பெருவுடையார் ஆலய ஆனி மாத(57-ஆம்) பௌர்ணமி கிரிவல பெருவிழா நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீகணக்க விநாயகர் ஆலயத்தில் மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

மாலை 4:30 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலை 5:30 மணிக்கு பெளர்ணமி கிரிவலம் மற்றும் 7:00 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி அபிஷேகத்தை கண்டு களித்தனர். மேலும் பௌர்ணமி கிரிவலத்தில் நடந்து சென்று சிவபெருமானை தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!