இலவச வீட்டுமனை வழங்கும் முடிவை திரும்ப பெற வலியுறுத்தி முற்றுகை

இலவச வீட்டுமனை வழங்கும் முடிவை திரும்ப பெற வலியுறுத்தி முற்றுகை
X

ஜெயங்கொண்டம் அருகே கிராமத்திற்கென்று உள்ள சிறிய அளவிலான புறம்போக்கு இடத்தில் இலவச வீட்டு மனை வழங்குவதை கண்டித்து கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன

Villagers besieged and protested against the provision of free housing in the outlying areas

ஜெயங்கொண்டம் அருகே கிராமத்திற்கென்று உள்ள சிறிய அளவிலான புறம்போக்கு இடத்தில் இலவச வீட்டு மனை வழங்குவதை கண்டித்து கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

அரியலூர் மாவட்டம் வீரபோகம் கிராமத்தில் வீடில்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவதற்காக அருகிலுள்ள கைலாசபுரம் கிராமத்தில் உள்ள நத்தம் புறம்போக்கு இடத்தில் வருவாய்த்துறை சார்பில் அளவீடு செய்து எல்லைக்கல் நடப்பட்டது. இதுகுறித்து கேள்விப்பட்ட கைலாசபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கைலாசபுரம் கிராமத்திற்கென்று உள்ள அரசு புறம்போக்கு இடம் இது மட்டும்தான் எங்கள் கிராமத்திலேயே வீட்டு மனை இல்லாதவர்கள் அதிகம் பேர் உள்ளனர். மேலும் கிராமத்திற்கான அங்கன்வாடி கட்டிடம், சிறார் பள்ளிகள் அனைத்தும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. வாடகை கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசு அனுமதி அளித்தால் கட்டிடம் கட்டுவதற்கு உள்ள ஒரே இடம் வீட்டுமனைக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடம் மட்டும் தான். எனவே இந்த இடத்தில் இலவச வீட்டுமனை வழங்கும் முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பொது சுகாதார நிலையம், ரேஷன் கடை உள்ளிட்டவைகளுக்கு இந்த இடம் மட்டுமே இருப்பதாலும் மேலும் அங்கன்வாடி வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதாகவும் அரசுமூலம் அங்கன்வாடி கட்டிடம், ரேஷன் கடை, பொது சுகாதார நிலையம் அமைக்க இந்த இடம் பயன்படும். எனவே இந்த இடத்தை யாருக்கும் விட்டுத்தர முடியாது.மேலும் கைலாசபுறத்தில் நிறைய பேர் பட்டா இல்லாமல் புறம்போக்கில் குடியிருந்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்