அரியலூர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை

அரியலூர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை
X
அரியலூர் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு மகிளா நீதிமன்ற நீதிபதி 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த குமிழியம் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் ராஜதுரை(58). கூலி தொழிலாளியான இவர், கடந்த 2019 ஏப் 22 ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், இதுகுறித்து பெற்றோரிடம் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் 2019 ஏப் 23 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்த வழக்கு அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதி ராஜதுரைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.17 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து ராஜதுரை திருச்சி மத்திய சிறறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
ai marketing future