சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண் உள்ளிட்ட 6 பேர் கைது

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண் உள்ளிட்ட 6 பேர் கைது
X
அரியலூர் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2பெண் உள்ளிட்ட 6பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி நான்காம் வகுப்பு வரை படித்துவிட்டு தனது தாயாருக்கு வீட்டு வேலை செய்வதில் உதவியாக இருந்து வந்தார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர்களுடன் பழக்கமான சாந்தா என்பவர் வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். சிறுமியை அழைத்துச் சென்ற சாந்தா சிறுமியை சந்திரா என்ற பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து சந்திரா சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை பல்வேறு பகுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். தொடர்ந்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதால் சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து சிறுமியை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோர்கள் சேர்த்த நிலையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியதால் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். விசாரணையில் சிறுமியை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய சாந்தா சந்திரா மற்றும் சிறுமியிடம் பாலியலில் ஈடுபட்ட வினோத், பாலாஜி, பிரேம், செந்தில், பாலச்சந்திரன், செந்துறை விடுதி மேனேஜர் தனபால் உரிமையாளர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட சாந்தா, சந்திரா வினோத், பிரேம், செந்தில், பாலச்சந்திரன், விடுதி மேனேஜர் தனபால் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் பாலாஜி விடுதி உரிமையாளர் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!