ஜெயங்கொண்டம் அருகே முதியோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கம்
ஜெயங்கொண்டம் கூவத்தூர் சேவை மையத்தில், ஆல் தி சில்ட்ரன் டிரஸ்ட் மற்றும் பரப்ரம்மம் பவுண்டேசன் சார்பில் நடந்த முதியோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கம்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கூவத்தூர் சேவை மையத்தில், ஆல் தி சில்ட்ரன் டிரஸ்ட் மற்றும் பரப்ரம்மம் பவுண்டேசன் சார்பில் முதியோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பரப்ரம்மம் பவுண்டேஷன் நிறுவனர் முத்துக்குமரன் தலைமை தாங்கி பேசியதாவது, முதியோர்கள் கொரோனா காலக்கட்டத்தில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
சத்துள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது. உடல் நலனில் அக்கறை கொண்டு மருத்துவரிடம் உடனே காண்பிக்க வேண்டும்.
மேலும் அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்காகவே 24 மணி நேரமும் இலவசமாக இயங்கும் அவசர தொலைபேசி சேவை 1098. குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல்களை தடுக்க வேண்டும். பாதுகாப்பும் பராமரிப்பும் அளிக்க வேண்டும் என்று பேசினார்.
முன்னதாக ஆல் தி சில்ட்ரன்ஸ் டிரஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் அனைவரையும் வரவேற்றார். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அரியலூர் சைல்டு லைன் 1098 அணி உறுப்பினர் மாயவேல் வழங்கினார். இறுதியில் கூவத்தூர் பஞ்சாயத்து தலைவர் டேவிட் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu