சீமைகருவேல மரங்களை அழிக்கும் பணி துவங்கியது

சீமைகருவேல மரங்களை அழிக்கும் பணி துவங்கியது
X
ஜெயங்கொண்டத்தில் சீமை கருவேல மரங்களை ஆளில்லா விமானம் மூலம் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து அழிக்கும் பணிதுவங்கியது.

ஜெயங்கொண்டம் நகர மைய பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை ஆளில்லா விமானம் மூலம் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து அழிக்கும் பணி துவக்கம்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் முதற்கட்டமாக ஆளில்லா விமானம் மூலம் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்து தெளித்து பயனற்ற தாவரங்கள் மற்றும் சீமை கருவேல மரங்களை அழிக்கும் பணி துவங்கி உள்ளனர். தற்பொழுது துவக்கமாக ஜெயங்கொண்டம் ஒன்றிய அலுவலக அருகில் உள்ள ஆவேரி கரையில் பின்பகுதியில் உள்ள சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள கருவேல மரங்கள் மீது ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து செந்துறை சாலையில் உள்ள இடுகாடு அருகே வண்டி உள்ள கருவேல மரங்கள் மீதும் ஆளில்லா விமானம் மூலம் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது. மருந்து தெளித்த 15 நாட்களில் கருவேல மரங்கள் பட்டுப் போய் இழந்து விடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story