அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது

அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது
X

கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட ஜெகதீஷ்.

அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் தா.பழூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தா.பழூர் சிவன் கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி ஆய்வு செய்தனர்.

அங்கு சென்று பார்த்தபோது கஞ்சா பொட்டலங்களை வைத்து பிரித்துக் கொண்டிருந்த இருவரை பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் தப்பியோடிய நிலையில் ஒருவரை பிடித்து அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலத்தை கைப்பற்றினர். இதில் கீழமைகல்பட்டி மெயின்ரோட்டை சேர்ந்த அருமைராஜ் மகன் ஜெகதீஷ் (வயது 20 ) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய கும்பகோணம், அண்ணல் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் விக்னேஷ் என்பவர் தலைமறைவான நிலையில் வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!