கூழாங்கல் கடத்தி வந்த லாரி பறிமுதல் : ஓட்டுநர் தப்பி ஓட்டம்

கூழாங்கல் கடத்தி வந்த லாரி பறிமுதல் : ஓட்டுநர் தப்பி ஓட்டம்
X

லாரியில் கடத்தி வரப்பட்ட கூழாங்கல்

தா.பழூர் அருகே சிலால் நான்குசாலையில் கூழாங்கல் கடத்திவந்த லாரி பறிமுதல் : தப்பி ஓடிய ஓட்டுனருக்கு காவல்துறையினர் விசாரணை

கூழாங்கல் கடத்தி வந்த லாரி பறிமுதல் தப்பி ஓடிய ஓட்டுனரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே சிலால் நான்கு சாலையில் தா.பழூர் காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனை செய்ய முயன்றபோது. லாரியை ஓட்டி வந்த நபர் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.

இதனையடுத்து காவல்துறையினர் லாரியை சோதனை செய்ததில் அரசு அனுமதியின்றி 2 யூனிட் கூழாங்கல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்து தா.பழூர் காவல் நிலையம் எடுத்து வந்தனர். பின்னர் காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர், தப்பி ஓடிய நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!