25 ஆயிரம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

25 ஆயிரம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள். 


1260 ஹான்ஸ் பாக்கெட்டுகள், 480 பான்மசாலா உள்ளிட்ட 25 ஆயிரம் மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேவங்க முதலியார் தெருவில் குமரன் என்பவரது கடையில் போலீசார் சோதனை செய்தனர். இதில் 1260 ஹான்ஸ் பாக்கெட்டுகள், 480 பான்மசாலா உள்ளிட்ட 25 ஆயிரம் மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடையின் உரிமையாளர் குமரனை கைது செய்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!