ஜெயங்கொண்டத்தில் 16 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த கடைக்கு சீல் வைப்பு

ஜெயங்கொண்டத்தில் 16 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த கடைக்கு சீல் வைப்பு
X

ஜெயங்கொண்டத்தில் குட்கா பதுக்கி வைத்திருந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஜெயங்கொண்டத்தில் 16 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜூலி ரோடு அருகே ஜாபர் அலி (41) என்பவர் வெற்றிலைக் கடை வைத்துள்ளார். ஜெயங்கொண்டம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஜாபர் அலி குடோனில் 6 ஆயிரம் மதிப்புள்ள ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 16 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஜாபர்அலியின் கடைக்கு காவல்துறையினர் முன்னிலையில் சுகாதார ஆய்வாளர் சீல் வைத்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!