ஜெயங்கொண்டத்தில் எஸ்டிபிஐ சார்பில் நீதி கேட்கும் போராட்டம்

ஜெயங்கொண்டத்தில் எஸ்டிபிஐ சார்பில் நீதி கேட்கும் போராட்டம்
X

ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு,  எஸ்டிபிஐ சார்பில் நீதி கேட்கும் போராட்டம் நடத்தினர்.


பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு, எஸ்டிபிஐ சார்பில் நீதி கேட்கும் போராட்டம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு, மாவட்ட எஸ்டிபிஐ அமைப்பு சார்பில், டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, நீதி கேட்கும் போராட்டம் நடைபெற்றது.

இதில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சையது முகமது உஸ்மானி, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். பாபர் மசூதி இடிப்புக்கு நீதி கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் எனக்கூறி, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!