உலக மலேரியா தின விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்ட பள்ளி மாணவர்கள்

உலக மலேரியா தின விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்ட பள்ளி மாணவர்கள்
X
செவிலியர் மாணவிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு உலக மலேரியா தின விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அரசு சமுதாய நல மையம் மற்றும் பரப்ரம்மம் சார்பில் உலக மலேரியா தினம் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா செவிலியர் பயிற்சி கல்லூரியில் அனுசரிக்கப்பட்டது. பரப்ரம்மம் - பரப்ரம்மம் கிளப்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். மீன்சுருட்டி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார் சிறப்புரையாற்றி உறுதிமொழி வாசித்தார்.

சுகாதார ஆய்வாளர்கள் விமல்ராஜ், விக்ரமன், நர்சிங் கல்லூரி முதல்வர் சுருதி, ஆசிரியர்கள், செவிலியர் மாணவிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு உலக மலேரியா தின விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மலேரியா நோய் பற்றியும்,அறிகுறிகள் சிகிச்சை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இறுதியில் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி முதல்வர் தனலட்சுமி நன்றி கூறினார்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare